கிரிக்கெட் சூதாட்டத்தில் 90 லட்ச ரூபாய் வரை இழந்ததால் கடன் நெருக்கடியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் .
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரை சேர்ந்தவர் சபாநாயகம் (35 ). சபாநாயகம் கார் டீலர் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இவர் நேற்று (14/04/2023 ) அதிகாலை 2:10 மணிக்கு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷன் உள்ள தனியார் ஹோட்டலில் முன்பதிவு செய்து தங்கி இருந்ததாக தெரிகிறது.
15/4/2023 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு காலி செய்ய வேண்டியவர் தகவல் கூறும்போது அவருடைய போன் போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்ததாகவும் கதவு தட்டும்போது எந்த தகவலும் கிடைக்காததால் வேறு மாற்று சாவியை கொண்டு ஹோட்டல் ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர். அப்போது பாத்ரூம் அருகே இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவலின் பேரில் அங்குவந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் , பரிசோதித்துவிட்டு அவர் இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள்.
இது தொடர்பாக C4 ரத்தினபுரி காவல் நிலைய உதவிஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுமேற்படி பிரதேச உடலை சிஎம்சி கொண்டு செல்லப்பட்டது விசாரணை செய்து வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் இழந்ததால் மனவேதனையில் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. கிரிக்கெட் தொடர்பான செயலியில் பணத்தை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.என்ன செயலி யார் யார் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், யார் மூலமாக அவருக்கு அழுத்தம் ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் , கிரிக்கெட் சூதாட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .