- அதிமுக ஆட்சியில் குருப் ஒன் தேர்வில் நடந்த முறைகேடு. தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று வழங்கி 20 சதவீத இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு. தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலீசான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த 4 பேர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல். லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கில் திருப்தி இல்லை விசாரணையை தொய்வு ஏற்படுத்தும் விதமாக மெத்தனமாக விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் குற்றச்சாட்டு.
இந்த நிலை நீடித்தால் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் நீதிபதிகள் கருத்து. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் வழி பயின்றதற்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் யார்? TNPSC பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறித்து எந்த அச்சமும் அதிகாரிகள் மத்தியில் இல்லை இந்த நிலை நீடித்தால் அரசுக்கு எவ்வாறு நற்பெயர் கிடைக்கும், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2019 ஆம் ஆண்டு தமிழ் வழியில் பயின்றதாக தேர்ச்சியான நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டது விசாரணையின் போது தமிழ் வழி பயின்றதாக போலியான சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக 4 பேர் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மூன்று பேர் என 7 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த முறைகேடு நடந்ததா இல்லை வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதா என விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
அப்பொழுது குறிப்பிட்ட நீதிபதிகள் குறிப்பிட்ட அந்த வருடத்தில் எத்தனை பேர் தமிழ் வழியில் குரூப் 1 தேர்வில் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றனர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக செயல்பட்டு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கில் விசாரணையில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை ஒவ்வொரு முறையும் பழைய விஷயங்களையே நீதிமன்றத்தில் பேசுகிறது புதுசு புதுசாக கண்டுபிடித்து ஒவ்வொன்றாக சாக்கு செல்கின்றது.
குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் வழியில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டது எத்தனை பேர் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றனர் அதில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும். இந்த வழக்கில் TNPSC 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர் அவர்களின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் அரசு அதிகாரிகள் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அதனை நிறைவேற்றுவதில்லை ஒரு சில உத்தரவுகளை மூன்று ஆண்டுகள் நான்கு ஆண்டுகள் ஆனாலும் அதை மதிப்பது கூட இல்லை மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு துறை அதிகாரிகளுக்கு துளியும் அச்ச உணர்வு கிடையாது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பற்றி கவலை படுவதில்லை. இது அரசு அலுவலர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு துனையக செயல்படுவதையே காட்டுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/malpractice-in-karur-aravakurichi-village-panchayats-case-in-madurai-branch-of-high-court/
இவ்வாறு செயல்பட்டால் அரசுக்கு எப்படி நற்பெயர் கிடைக்கும். அரசு சமூக நீதி அரசு என்று சொல்லி பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருகிறது ஆனால் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையே நிறைவேற்றுவதில்லை என கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இறுதியாக 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது இல்லையென்றால் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் இந்த வழக்கு விசாரணையை வேறு சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.