மின் கணக்கெடுப்பில் முறைகேடு.! – பொது மக்கள் அதிர்ச்சி.! மின் கணக்கெடுப்பாளர் சஸ்பெண்ட்…!

1 Min Read
  • பேராவூரணி நகர பகுதியில் உள்ள வீடுகளில் வீடுகள் மற்றும் கடைகளில் மின்வாரிய அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக முறையாக ரீடிங் எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதன் காரணமாக மின் கணக்கீட்டாளர் ரமேஷ் என்பவர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதியில் உள்ள வீடுகள் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் கடந்த சில மாதங்களாக முறையாக மின் கணக்கெடுப்பு நடக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் கணக்கீட்டாளர் ரமேஷ் என்பவரை செயற்பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் ரமேஷ் என்பவர் பேராவூரணி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த பத்து மாதங்களாக மின் கணக்கீட்டாளராக பணியில் இருந்து வந்தார். இவர் வீடுகளுக்கு கடைகளுக்கு கணக்கு எடுக்க செல்லும்போது செல்லும்போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் பல வீடுகளுக்கு கணக்கெடுத்து விட்டு பல வீடுகளுக்கு கணக்கெடுக்காமல் விட்டுச் சென்றதாகவும் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் ஒரே குறைந்த அளவு மினிமம் சார்ஜ் கட்டுமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு வந்தது தற்போது ரீடிங் அதிகரித்த நிலையில் ஒவ்வொருவரும் 10,000 15,000 20,000 என மின்கட்டணம் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து தொடர்ந்து புகார் வந்த நிலையில் மின்மாறிய உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மின் கணக்கீட்டாளர் ரமேஷ் மீது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் மின்கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review