இந்தியா கூட்டணி கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்-மல்லிகார்ஜுன கார்கே…!

2 Min Read

இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம், ஒருங்கிணைப்பாளர் நியமனம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே நீண்ட காலமாகப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தியா கூட்டணி கட்சிஆலோசனை கூட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்படிப் பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில்,இந்தக் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயர் வைக்கப்பட்ட போதிலும், இதன் தலைவராக யார் இருப்பார் என்பதில் குழப்பம் நிலவியது. நிதிஷ்குமார் தொடங்கி பலரது பெயர் இதில் அடிபட்டது. இதற்கிடையே இதற்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக (தலைவர்) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியா கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மல்லிகார்ஜூன் கார்கே ஒரு மூத்த கர்நாடகா அரசியல்வாதி மற்றும் பதினாறாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் இருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். தூய்மையான அரசியல்வாதி. அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிர்வாகத்தில் நல்ல ஞானம் மிக்கவர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தற்போது அவர் லோக்சபா காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் கார்கே. அதில் 9 முறை சட்டசபைக்கும் கடைசியாக குல்பர்கா லோக்சபா தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். கார்கே, தலித் வகுப்பைச் சேர்ந்தவர். 40 வருடம் எம்எல்ஏவாகவும், 5 வருடம் எம்பியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காணொலி மூலம் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடும் இறுதியாகும் எனத் தெரிகிறது.

 

Share This Article
Leave a review