திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா..!

1 Min Read
சிம்ம வாகனம் மீது யோக நரசிம்ம அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமமோற்சவசத்தின் 3ம் நாளான மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் ,யோக நரசிம்ம அவதாரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

- Advertisement -
Ad imageAd image

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் மூன்றாம் நாளான நேற்று மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் பழகலாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று மலையப்ப சுவாமி சிம்ம வாகனம் மீது யோக நரசிம்ம அவதாரத்தில் எழுந்தருளி நான்கு மாத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார் ஜீவர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடி வேத மந்திரங்கள் முழங்க வீதி உலாவில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு,புதுச்சேரி,பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாச சாகித்திய திட்டத்தின் கீழ் வீதி உலாவில் பரதநாட்டியம்,குச்சிபுடி, மயிலாட்டம், காவடி ஆட்டம், கோலாட்டம் ஆடிய படி கலைஞர்கள் வீதி உலாவில் பங்கேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

இந்நிலையில் காடுகளின் ராஜாவான சிங்கம் மீது அமர்ந்து யோக நரசிம்ம அவதாரத்தில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழாவின் தொடர்ச்சியாக நேற்று இரவு முத்து பந்தல் வாகனத்தின் சுவாமி அருள் பாளித்தார்.தொடர்ந்து நவராத்திரி விழா சிறப்பு சுவாமி வீதி உலாக்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review