வனப்பகுதி விட்டு வெளியே வந்த மக்னா,தனியார் தோட்டங்களில் உலா.

1 Min Read
யானை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா ஆனைமலை புலிகள் காப்பகம் மானம் பள்ளி வனப்பகுதியில் அடர் வனப்பகுதியில் ரேடியோ கலர் பொருத்தி விடப்பட்டது,டாப்சிலிப் வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சரளப்பதி வனப்பகுதியில் மக்னா நடமாட்டம் இருந்தது,இதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் துணை கள இயக்குனர் பார்க்கவே தேவ் தலைமையில் கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி,அரிசி ராஜா என்கிற முத்து,ராஜவர்தன் மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா வனப் பகுதி விட்டு வெளியேறாத வண்ணமாக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்,

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் மீண்டும் வனத்தை விட்டு வெளியேறிய மக்னா தனியார் தோட்டங்களில் மாமரம் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது தற்போது விவசாய நிலங்களில் மக்னா உலா வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மக்னா யானைக்கு பொருத்தப்பட்ட ரேடியோ காலர் ஐ.டி.தற்போது செயல் இழந்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Share This Article
Leave a review