வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். என்று சென்னையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளார். அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி பல்வேறு துறை சார்ந்த 22 நபர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அமித்ஷா பாஜக தலைவர் அண்ணாமலைTamilian ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன், பொது செயலாளர் கேசவ விநாயகம் போன்றவர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சென்னை கோவிலம்பாக்கத்தில் நடந்த தொகுதி சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 25 எம்பிக்களை அனுப்ப வேண்டும். வெற்றியை இலக்காக வைத்து அனைத்து தொகுதிகளிலும் பூத்து கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், தமிழகத்தில் முதல்வராக வரவேண்டும் என்ற அளவில் மட்டுமே நீங்கள் இறந்து விடக்கூடாது.
தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும். தமிழர்களை பிரதமராக்கும் வாய்ப்பு இரண்டு முறை தவறிவிடப்பட்டுள்ளது. தமிழகம் காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக உறுதி எடுப்போம் என்று பேசியுள்ளார்.
சென்னை கூட்டத்தை முடித்துக் கொண்டு அமித்ஷா வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வேலூர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்தவர் அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார்.