வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிபட்டது.

1 Min Read
வனத்துறையில் பிடிபட்ட குரங்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை காலை மற்றும் மாலை நேரங்களில் துரத்தி சென்று தாக்குகிறது இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகன செல்வோரை குரங்கு துரத்தும் போது விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நடந்து செல்பவர்களை எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதாகவும் வாகனத்தில் செல்பவர்களை மட்டும் துரத்தி சென்று கடிப்பதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை 15 க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும், பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர. இது குறித்து வனத்துறையிடம் தெரிவித்தும் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

- Advertisement -
Ad imageAd image

இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு  இந்த ஆண் குரங்குடன்  பெண் குரங்கு ஒன்று குட்டி குரங்கு ஒன்று என மூன்று குரங்குகள் வந்ததாகவும் அதில் பெண் குரங்கு காரில் அடிப்பட்டு இறந்ததாகவும் குட்டி குரங்கு இருசக்கர வாகனத்தில் அடிபட்டு இறந்ததாகவும் இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த சம்பவத்திலிருந்து இந்த குரங்கு இது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொது மக்களை அச்சுறுத்தும் குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைத்ததிருந்த நிலையில் இன்று சென்னை கிண்டி உயிரினங்கள் மீட்புக் குழு வனத்துறையினர் நான்கு பேர் கொண்ட குழு   பொதுமக்களை அச்சுறுத்தி வந்த செங்குரங்கை பிடித்து சிகிச்சைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர். இந்த குரங்கு பிடிக்கப் பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a review