உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் மட்டுமே தனது மகள் உயிரிழந்ததாக தாயார் குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோ. கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்த தீபா (32) – ஆனந்தகுமார் (43) தம்பதியினருக்கு ஆதனா, அகல்யா ஆகிய 2 பெண் குழந்தைகளும், ஆதிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை என 3 குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில் தம்பதியினரின் 2 ஆவது மகளாகிய 8வயதுடைய அகல்யாவிற்கு கடந்த ஆண்டு கிட்னி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர், மற்றும் சென்னை அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 30ஆம் தேதியன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த்து. நிற்கும் இதுபோன்று டயாலசிஸ் அளித்த பின்னர் மாலை 5 மணியளவில் அகல்யாவிற்கு திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் தாகம் என கூறியதால் சிறுமியின் தாயார் தீபா அருகில் படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை கொடுத்துள்ளார்.
உடனடியாக சிறுமி துப்பிய நிலையில் அருகில் இருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல ; நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவசர வார்டிற்கு சிறுமி அகல்யாவை மாற்றம் செய்து சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
.