போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத் …

The News Collect
1 Min Read
  • போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்
சமீபத்திய போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான திமுக-வை தொடர்புபடுத்தி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
 

மேலும் இது தொடர்பினால் விமர்சனங்களையும் திமுகவை தொடர்பு படுத்தி எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டும் வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/in-vannarappet-the-high-court-has-ordered-the-chennai-corporation-to-file-a-status-report-on-the-measures-taken-to-prevent-rain-water-from-stagnating/

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது, ஆர்.எஸ் பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாரயாணன் ஆஜராகி வாதம் வைத்தனர்.பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டு டிசம்பர் 3 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Share This Article
Leave a review