- தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவரிடம் இருந்து காவலர்கள் எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப ஒப்படைக்க கோரி வழக்கு.
- ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மனுதாரரின் பணத்தை (1 லட்சத்து 9 ஆயிரம் )திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
- ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவுன்சிலர் கணவரின் பணத்தை திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனு : நான் ராமநாதபுரம் முதுகுளத்தூரில் வசித்து வருகிறேன் எனது மனைவி காயத்ரி தஞ்சாவூர் நகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு என் மீது கடலாடி காவல்துறையினர் ஒரு பொய் வழக்கு போட்டு என்னை அழைத்துக் கொண்டு போய் எனது காலை உடைத்தனர்.
இந்த வழக்கில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எனது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் எனக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் கடந்த மே 2023 ஆம் ஆண்டு நான் தஞ்சாவூர் சென்றபோது அங்கு வந்த கடலாடி போலீசார் என்னை மிரட்டி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர் , மேலும் எனது கையில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு என்னை விட்டு விட்டனர்.
என்னிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தை எனக்கு திரும்ப வழங்கக்கோரி முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளர் ( DSP ) மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டேன் , ஆனால் இதுவரை என்னிடம் இருந்து பறித்த பணம் திரும்ப தரப்படவில்லை ஆனால் எனக்கு எதிராக மீண்டும் பொய்யான புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் என்னை காவல் நிலையம் வர வைத்து காவல்துறை அதிகாரியின் மீது தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற வேண்டும் எனவும் தொடர்ந்து மிரட்டுகின்றனர்.
எனவே என்னிடமிருந்து பறித்து சென்ற ரூபாய் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை திரும்ப தர உத்தரவிடுமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவலர்கள் பிடுங்கி சென்ற ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயில் 5 ஆயிரம் ரூபாய் திரும்ப தரப்பட்டுவிட்டது , மீதமுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரம் தொகையை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/erode-sadiyapaswamy-temple-restoration-case-madras-high-court-orders-hindu-charitable-and-endowment-department-to-respond-in-2-weeks/
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்.
மனுதாரருக்கு சொந்தமான ரூபாய் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப பெற மனுதாரர் காவல்துறை கண்காணிப்பாளர் அணுக வேண்டும் . காவல்துறை கண்காணிப்பாளர் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.