நவம்பர் 7ஆம் தேதி வரை ”கங்குவா” திரைப்படம் வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்…

1 Min Read
  • நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை நவம்பர் 7ஆம் தேதி வரை வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், டெடி- 2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணி, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதில் 45 கோடி திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா மீதமுள்ள 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கலான் படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/the-issue-of-tamil-nadu-fishermen-in-sri-lankan-prison-a-case-seeking-an-order-to-the-union-and-state-governments-to-take-appropriate-action/

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்த போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், நவம்பர் 7ஆம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என்றும் தங்கலான் திரைப்படம் ஓ டி டி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Share This Article
Leave a review