திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் பிரவீன் குமார் (35) அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் இன்பரசி ஒருவர் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார்.
அவர் துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தனர் உறவினர்கள். துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் அருகில் அரண்வாயில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த திருவூர் பகுதியைச் சேர்ந்த ராகுல்ராஜ் என்ற அகஸ்டின் மற்றும் அஜித்குமார் உட்பட 5 பேர் தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு இருந்த வழக்கறிஞரின் உறவுக்காரர்களான இருவரிடம் தேவை இல்லாமல் பேச்சு கொடுத்துள்ளனர் அதற்கு அவர்களும் பதில் பேச்சு பேச வாக்குவாதம் முற்றியது இந்த நிலையில் திடீரென அந்த பகுதியில் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.முதலில் அகஸ்தியன் என்பவர்தான் அவர்களை தாக்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து உறவுக்காரர்கள் அவர்களுக்கு தெரிந்த உறவினரான வழக்கறிஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அந்த சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளனர். அங்கு வந்து வழக்கறிஞர் பிரவீன் குமார் இருவரிடமும் என்ன நடந்தது என்பதை விசாரித்துக் கொண்டிருந்தார் அதில் ஒரு தரப்பினர் தேவையில்லாமல் தங்கள் உறவினர்களை தாக்கியதை கண்டு பேசியுள்ளார் வழக்கறிஞர்.
சம்பவ இடத்திற்கு வந்த வழக்கறிஞரை பிரவீன்குமாரையும் தகாத வார்த்தைகளால் பேசி அவரையும் கிரிக்கெட் ஸ்டம்ப் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அத்தோடு மட்டும் விட்டு விடாமல் மேலும் அவரை வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் காயமடைந்த வழக்கறிஞர் பிரவீன் குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டு செவ்வாபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய ரவுடி அகஸ்டின் மற்றும் அஜித் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை செவ்வாப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கஞ்சா போதையில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர்ந்து இந்த பகுதிகளில் கஞ்சா வியாபாரம் நடப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.அவர்களை கைது செய்த போலீசார் அந்த பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை தடுக்கும் விதமாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.