மதுராந்தகம் அருகே கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து .

1 Min Read
தொழிற்ச்சாலையில் தீ

வாகனங்களுக்கு  சீட் ஆகியவற்றை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தொழிற்சாலையில்  திடீர் தீ விபத்து .

- Advertisement -
Ad imageAd image

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில்  தொழிற்சாலை  செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலை

இந்த தொழிற்சாலையில் சுமார் 300 டன் எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்கும் மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப் பொருட்களும், மறுசுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் தீ பற்றி எரிந்தன.இதில், மூலப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த  கண்டெய்னர் லாரியும் தீ பற்றி எரிந்தது.

மேலும் மறுசுழற்சி செய்ய பயன்படுத்தப்படும் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்களும் சேதமடைந்தன.

தொழிற்ச்சாலையில் தீ

இந்த தீ விபத்தில், சுற்று வட்டார பகுதி கிராமங்களான புதுப்பட்டு, சாத்தமை, மலைப்பாளையம், அன்டவாக்கம், வேடவாக்கம், வேடந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.இதனால் பறவைகளும் பாதிப்புக்குள்ளாகின.

தீயினை கட்டுப்படுத்த மதுராந்தகம், செய்யூர், அச்சிறுபாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு,வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்,  ஈடுபட்டு வருகின்றனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்கிற கோணத்தில் மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்வாய்ப்பாக தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Share This Article
Leave a review