திருக்குறளை எப்படி வேண்டுமானாலும் கேளுங்க… நான் சொல்வேன் ஆறு வயது சிறுவன் கவின்.

1 Min Read
சிறுவன் கவின்

கோவை வெள்ளலுாரை சேர்ந்த பிரசாந்த், ஜீவிதா தம்பதியின் மகன் தான் கவின் சொற்கோ. தனியார் பள்ளியில், 2 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பெற்றோர், தமிழ் கற்க பயிற்சி அளித்து வந்தனர். ஆனால் சிறுவனோ அதையும் தாண்டி, 41 திருக்குறள்களை கற்று, அதை எப்படி கேட்டாலும் பிழையில்லாமல் கூறி அசத்தி வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image
சிறுவன் கவின்

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், திருக்குறள் பர்ஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட் என முதல் பாடமாக, குறளை படிப்பதில் கவனம் செலுத்துகிறார் கவின்.விலங்குகளின் பெயர்கள், அதன் பழக்க வழக்கம், இந்திய மாநிலங்களின் தலைநகரம், யூனியன் பிரதேசம், மாநில விலங்குகள், கண்டங்கள், பெருங்கடல், டங் டுவிஸ்டர் என, பிரமிக்க வைக்கிறார்.

Share This Article
Leave a review