கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் தலைமையில் இரண்டு சிறப்புப்படை காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது எழுத்தூர் மற்றும் குரும்பலூர் ஏரிக்கரை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 34 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 6,800 லிட்டர் மற்றும் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 பிளாஸ்டிக் பேரல்கள், 250 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 2,000 லிட்டர் என இரண்டு இடங்களிலும் ஒரே நாளில் சுமார் 8,800 லிட்டர்கள் சாராய ஊரல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதியில் சாராய உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட காவல்துறை பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கூட காவல்துறையினர் கண்களில் படாமல் ரகசிய இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சலை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அந்த பகுதி மக்கள்.