விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய திருமாவளவன் தமிழீழத்திற்கு என்று தனிமாநாடு நடத்தியதும்,இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறை சட்டம் கொண்டுவந்த போது அதையும் எதிர்த்து மாநாடு நடத்திய ஒரே கட்சி, மரண தண்டனைக்கு எதிர்த்து மாநாடு நடத்திய இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருவதாகவும், சனாதன கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெல்லும் ஜனநாயகம் என்கின்ற தலைப்பு ஏன் என்றால் இப்போது ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.எனவே தான் இந்த மாநாட்டிற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம்.இந்த மாநாட்டிற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த மாநாடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும்.சனாதனம் பற்றி திராவிடர் கழம்போசியது,பெரியார் பேசினார்,வீரமணி பேசினார் அவர்கள் பேசினார்கள் என்றால் அவர்கள் ஓட்டு அரசியலில் ஈடுபடாதவர்கள்.ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஓட்டு அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே சனாதனத்தை எதிர்த்து வருகிறது.
இந்துதுவாவிற்கு எதிர்பாக நடத்தப்பட்ட மாநாடு போன்று ஒரே நேர்கோட்டில் வெல்லும் ஜனநாயகம் என்ற் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாகவும், ஐந்து மாநில தேர்தல் காங்கிரசா பாஜக அல்லது மோடியா, ராகுலா என்பதை மையமாக வைத்து நடந்த தேர்தல் இல்லை மாநிலத்திற்கு இடையேயான நடைபெற்ற பிரச்சனைக்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாநில வாரியான பிரச்சனைகளுக்கு மையப்படுத்தி நடந்த தேர்தல்.இந்த தேர்தல் முடிவுகளை பற்றி கவலை பட வேண்டிய அவசியமில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீழ்த்துகிற தேர்தலாக நடைபெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய அளவிலான கட்சியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கருத்தியல் ரீதியாக விசிக தேசிய அளவில் இருக்கிறது. நீட் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தான் நீட் உள்ளது.

கட்சிக்கு போதிய நிதி இல்லாதது தான் நமது பிரச்சனை கட்சிக்கு போதிய நிதி இருந்தால் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடும்.ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற்ற மாவட்ட செயலாளர்கள் தங்களின் பணி குறித்து பேசினர்,பின்னர் மாநாட்டு நிதியினை கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வழங்கினர்.