கோவையில் லியோ பட வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக, கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கிணத்துகடவு ஏ.பி.ஏ. சினிமா தியேட்டரில் பெண்களுக்கான லியோ பட சிறப்பு காட்சியை திரையிட்டனர்.
லீயோ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி உள்ள லியோ படம் திரையரங்குகளில் தற்போது ஓடி அதிக வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில், லியோ பட வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி தலைமையில் இளைஞரணி தலைவர் பாபு முன்னிலையில் கிணத்துகடவு மேற்கு ஓன்றிய தலைவர் கல்லாபுரம் பழனிச்சாமி ஏற்பாட்டில் மகளிர் சிறப்பு காட்சி கிணத்துகடவு ஏ.பி.ஏ.சினிமாஸ் தியேட்டரில் பெண்களுக்கான லியோ பட சிறப்பு காட்சியை திரையிடப்பட்டது.

இதில் பெண்கள் மட்டும், ஆகியோர் எல்லாரும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட இந்த காட்சியில் திரையரங்கம் முன்பாக பெண்கள் மகிழ்ச்சியை உற்சாகமாக வள்ளிக்கும்மி, ஓயிலாட்டம் ஆடியபடி லியோ படத்தை கண்டு ரசித்தனர். முன்னதாக படம் பார்க்க வந்த பெண்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்புகள் மற்றும் கேக்களை வெட்டி வழங்கி தங்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைமை தொண்டரணி தலைவர் கிரிஷ், தெற்கு மாவட்ட தலைமை இணை செயலாளர் தமிழரசன், எட்டிமடைபாலு, நாச்சிபாளையம் சதிஷ், தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் பாலாஜி, மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் பவீன், சரவணன்,ஆனந்த், இணையதளம் பாலாஜி, மகளிரணி கார்த்திகா, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் A. ஜோதி மகேஷ் வரன், மாணவரணி தலைவர் S.குணசேகரன், கிணத்துகடவு நகர தலைவர் சபரி, நகர செயலாளர் குணா, நகர தொண்டரணி தலைவர் வெங்கடேஷ், மதுக்கரை ஒன்றிய தலைமை தொண்டரணி தலைவர் ரமேஷ், விக்னேஷ், கிருஷ்னகுமார், நவீன், சுதாகர், ஆகியோர் உட்பட பலரும் இந்த லியோ பட வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.