லியோ திரைபட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்..!

3 Min Read
லியோ திரைபடம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாபு திரையரங்கத்தில் லியோ திரைபட டிக்கெட்டுகள் வெளிநபர்களை வைத்து பன்மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்.

- Advertisement -
Ad imageAd image

பெயருக்காக சொற்ப அளவிலான டிக்கெட்களை ஆன்லைனில் விற்பனை செய்துவிட்டு அதிக விலைக்கு டிக்கெட்-களை பிளாக்கில் 1000 முதல் 1200வரை விற்பனை செய்வதாக குற்றசாட்டு. திரையரங்க வாசலில் வெளிநபர் ஒருவர் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யும் வீடியோ டிக்கெட் வாங்க சென்ற ரசிகர் மூலமாக வெளியாகி அதிர்ச்சி.

*லியோ பட டிக்கெட்கள் காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் கள்ளத்தனமாக வெளிநபர்கள் வைத்து விற்பனை செய்யும் மேலும் ஒரு காட்சி வெளியாகி அதிர்ச்சி. மொத்த டிக்கெட்களையும் வாங்கி கொள்கிறேன் 600ரூபாய்க்கு கொடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்க ஆனாலும் முடியாது என கறார் காட்டும் வீடியோ

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படமானது நாளை 19ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளானது தொடர்ந்து எழுந்து வருகிறது.அதிலுமே டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தி விற்கப்பட்டு வருவதாக தமிழகம் முழுவதுமே தொடர்ந்து புகார்களானது எழுந்துவருகிறது.

இந்த நிலையிலேயே காஞ்சிபுரத்தில் லியோ திரைப்படமானது அரசு நிர்ணயித்த தொகையினை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட திரையரங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் திரையரங்குகள் மீது புகார் அளிக்கவும் தாலுகா,மாநகராட்சி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18அலுவலர்கள் அடங்கிய எண்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்து எச்சரித்திருக்கிறார்.

ஆயினும் மாவட்ட ஆட்சியரினுடைய எச்சரிக்கையையும் மீறி காஞ்சிபுரம் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய பாபு திரையரங்கத்தில் 3 திரைகள் இருக்கக்கூடிய நிலையிலே இதில் மூன்றிலியுமே லியோ திரைபடமானது வெளியாக இருக்கிறது.இந்த நிலையிலேயே லியோ பட டிக்கெட்டுகள் கவுண்டரில் விற்பனை நேற்று காலை கண்துடைப்புக்காக சொற்ப அளவிலானோருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கவுண்டரில் விற்கப்பட்ட டிக்கெட் அனைத்துமே திரைகள் 2 மற்றும் 3-வது திரைகளான பாபு பாரடக்ஸ்&பாபு மினி திரையில் மட்டும் அவற்றையும் பார்க்க இயலும் வகையில் டிக்கெட்களானது கொடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் மெயின் என்று சொல்லப்படக்கூடிய பிரதான திரையில் பார்க்ககூடிய டிக்கெட்கள் கவுண்டர்களிலோ ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்யப்படவில்லை எனும் குற்றசாட்டும் எழுந்திருக்கிறது.

லியோ திரைபட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை

மேலும் அந்த டிக்கெட்கள் வெளிநபர்கள் கொண்டு திரையரங்க வெளிப்புறத்தில் 1000 முதல் 1200வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டானது எழுந்திருக்கிறது.மேலும் வெளி நபர் ஒருவர் கவுண்டர் அல்லாது வெளியில் டிக்கெட்களை விற்கும் அதிர்ச்சி காட்சிகளானது நமக்கு ரசிகர்கள் மூலம் பிரத்தியேகமாக கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தலைகளை வழங்கிய நிலையில் பாபு திரையரங்கமானது மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையினையும் மீறி செயல்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே உடனடியாக இது குறித்து மாவட்ட நிர்வாகமானது சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விஜய் ரசிகர் மட்டுமல்லாது திரைபடத்தை காண வருவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

லியோ திரைபடம்

இந்நிலையில் லியோ பட டிக்கெட்கள் காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் கள்ளத்தனமாக வெளிநபர்கள் வைத்து விற்பனை செய்யும் மேலும் ஒரு காட்சி வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்த டிக்கெட்களையும் வாங்கி கொள்கிறேன், 600ரூபாய்க்கு கொடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்க ஆனாலும் முடியாது என கறார் காட்டும் வீடியோவானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review