திருவள்ளூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரா திட்டத்தின் மூலம் சாலையோர சிறுகடை வியாபாரிகளுக்கு இலவச நவீன தள்ளுவண்டிகள் வழங்கும் விழா நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு நகர் பகுதியில் உள்ள சாலையோர ஏழை, எளிய சிறு வியாபாரிகளுக்கு ரூ.45, லட்சம் மதிப்பீட்டில் 30 நபர்களுக்கு நவீன தள்ளுவண்டிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், நகர்மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன், நகர்மன்ற கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.