திருவாரூர் மாவட்டம், ஆர் எஸ் எஸ் ஐ கடுமையாக விமர்சித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு. கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு.
திருவாரூர் மாவட்டம், கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் தொடங்கியவுடன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் உரையாற்றினார்கள். அதன் பிறகு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசினார். அந்த மேடையில் அப்பாவை பேசும் பொழுது ஆர்.எஸ்.எஸ் ஐ கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ் கொள்கை படி செயல்பட்டு வருவதாகவும், தமிழக மக்களை வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். உயர் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசு போதுமான தகுதிக்கேற்ப நிதியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை என நிர்மலா சீதாராமன் மீதும் குற்றம் சாட்டினார்.
கலைஞர் குறித்து பல்வேறு சுவாரசியமான பதிவுகளை பேசினார். அது மட்டும் இல்லாமல் தற்போதைய திராவிட மாடல் ஆட்சி குறித்தும் பெருமையுடன் பேசினார்.
ஒரு குறிப்பிட்ட வகுப்பு ( சாதி) மட்டும் ஆடக்கூடிய பரதநாட்டியம் என்று பல வகுப்பைச் ( சாதிகளை சேர்ந்த) சார்ந்த மாணவிகளால் இந்த மேடையில் ஆடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் திராவிடம் என பேசினார். தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று கூறினார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மூலமாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்கள் கொண்டு வரப்பட்டு மூன்றாம் வகுப்பு , ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் மதிப்பீடு என்ற வகையில் தேர்வு வைக்கப்பட்டு அவர்கள் தோல்வியுற்றால் அந்த வகுப்போடு வீட்டுக்கு அனுப்பும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை 800 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு செல்வதற்கு மத்திய அரசும் ஆர்.எஸ்.எஸ்-ம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 1966 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் பசுவதை தடை சட்டம் கொண்டு வரக் கூறி தமிழகத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது எனவும், அப்போது காமராஜர் அவர்களை பார்த்து கடுமையாக விமர்சித்ததாகவும், அதாவது மீண்டும் நம்மள திரும்பவும் காட்டு மிராண்டிகளாக மாற்ற நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனால் பொங்கி எழுந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு டெல்லியில் அவர் தங்கி இருந்த வீட்டை எரியுட்டி அவரை கொல்ல நினைத்தது எனவும், குற்றம் சாட்டினார். பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு அதிகம் உள்ள ஓபிசி பிரிவினர் 60 சதவீதத்திற்கு மேல் உள்ளார்கள். ஆனால் அவர்களில் உயர் கல்வி படித்தவர்கள் வெறும் 2.9% தான் ஆனால் அங்கு உயர் வகுப்பினர் 10.5% உள்ளார்கள் அவர்களில் உயர் கல்வி பெற்றவர்கள் 10% பேர் ஆகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு சமூகத்திற்காகவே வாழ்கிறது. ஒரு சமூகத்தை மட்டுமே உயர்த்த நினைக்கிறது மற்ற சமூகங்களை படிக்க விடாமல் நிறுத்த நினைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ஆசிரியர் நியமன தேர்வு என்பது மத்திய அரசின் இசைவோடு தான் நடக்கிறது என்று தெரிவித்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கை சம்பந்தப்பட்ட கேள்விக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் சபாநாயகர் தனபால் சொன்னதையே குறிப்பிட்டார். அதாவது இருக்கை சம்பந்தமாக தனபால் முன்பு தெரிவித்ததுபடி அதன்படி தான் தற்போது இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து பேசும் பொழுது, ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்தார்.