பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் சாதனை படைக்க வாழ்த்து என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை (26.03.2024) செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 9 .38 லட்சம் பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். 4,107 தேர்வு மையங்களில் நடைபெறும்.

இத்தேர்வுகளில் பங்கேற்கும் அனைவரும் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தனது வாழ்த்தினை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.