திருவிடைமருதூர் அருகே மது போதையில் மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது.

1 Min Read
சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவருடைய மனைவி கண்ணம்மாள் வயது 75 தனது கணவரை பிரிந்த கண்ணம்மாள் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ரங்கராஜ் வீட்டில் வசித்து வந்தார். ரங்கராஜ் மகன் சுந்தர்ராஜ் வயது 40 கூலி தொழிலாளி சுந்தர்ராஜ் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது தனது வீட்டில் இடையூறாக கண்ணம்மாள் இருப்பதாக கருதிய சுந்தரராஜ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கண்ணம்மாள் தலையில் தாக்கியுள்ளார். இதில் அதே இடத்தில் கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி பந்தநல்லூர் போலீசார் விரைந்து சென்று கண்ணம்மாள் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுந்தர்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதுவுமரியாத மூதாட்டியை இப்படி கொலை செய்திருப்பது அந்த பகுதியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Share This Article
Leave a review