கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாத்திரத்தில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்பு சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் !!

1 Min Read
பாத்திரத்தில் சிக்கிய குழந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றன்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் அமிர்தா தம்பதியரின் 2 1/2 வயது குழந்தை இஷா மையி. இந்தக் குழந்தை வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்தினுள் அமர்வதற்காக முயற்சித்தது. அதை ஒட்டி பாத்திரத்தில் நுழைந்த குழந்தை,  வெளியேற முயற்சித்தது. ஆனால்,  வெளியேற முடியாத வந்த நிலையில், உடலின் ஏனைய பாகங்கள் பாத்திரத்தில் சிக்கியது. இதனால் குழந்தை அலறி அழவே, பெற்றோர் ஓடிச் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை பாத்திரத்தில் இருந்து மீட்பதற்காக கடும் முயற்சி மேற்கொண்டும் பலன் அளிக்காத நிலையில், நெய்யாற்றின் கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முயற்சி மேற்கொண்டு குழந்தைக்கு சிறு பாதிப்பு கூட ஏற்படாமல் பாத்திரத்தில் இருந்து மீட்டனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review