“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுˮ என்பார்கள். இந்தியாவின் சமூகப் பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக மதுபானம் காணப்படுகின்றது. மது குடிப்பவர்களை மட்டும் பாதிக்காமல் அவர்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது.உயிரைப் பறிப்பது மட்டுமல்லாது அவர்களையும்⸴ அவர்களது வாழ்வையும் நாசமாக்கி விடுகிறது. மதுப்பழக்கத்தால் ஆண்டுதோறும் பலர் இறக்கின்றனர் என்பதை உணர்ந்தும் அப்பழக்கம் சமூகத்தில் குறைந்ததாக தெரியவில்லை . அரசும் அதை தடை செய்யவில்லை . மதுவால் மேலும் ஒரு துயர சம்பவம் நமது தமிழ் நாட்டில் அரங்கேறியுள்ளது அதை பற்றிய செய்தி தொகுப்பை காண்போம்.
வில்லியனூர் அருகே கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் உறுவையாறு பகுதியை சேர்ந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகில் சின்னக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் மகன் ஐய்யப்பன்.வில்லியனுார் அடுத்துள்ள உறுவையாறு சாராயக்கடையில் கடந்த 1ம் தேதி மர்ம நபர்களால் கண்மூடி தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள ஐய்யனார் கோயிலில் பதுங்கி இருந்த உறுவையாறு முருகன் என்கிற பட்ட முருகன்,கார்த்தி , பிரதீப், சந்தோஷ் மற்றும் பச்சையப்பன் ஆகிய 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சாராயக்கடையில் சாராயம் குடிக்க சென்றபோது தங்களிடம் வந்து ஓசியில் சாராயம் வாங்கி கொடுக்குமாறு நச்சரிச்சதால் ஆத்திரமடைந்து ஐய்யப்பனை அடித்து உதைத்தாகவும், அதில் எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிட்டார் என வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூகத்தை சீர்திருத்தம் செய்வதற்கு மது ஒழிப்பு அவசியமாகின்றது. சாதிய ஒழிப்பு சமூகத்திற்கு எவ்வளவு அவசியமோ அந்தளவு மது ஒழிப்பும் அவசியமாகும்.
உழைக்கும் வர்க்கமான அடித்தட்டு வர்க்கமே மதுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த மது ஒழிப்பு அவசியமாகும்.
மேலும் இதுபோல் சம்பவங்களை தடுக்க அரசு விரைந்து செயல்படவேண்டும்.