’குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரிய திருவிழா’ – தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு.!

0
48
தேங்காய் உடைத்து வழிபாடு

ஆடி பெருக்கு விழா: குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரிய திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து குலம் செழிக்க சாட்டையடி வாங்கி வினோத வழிபாடு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பழங்குடி குருமன்ஸ் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினத்தில் தங்களுடைய பாரம்பரிய திருவிழா நடத்துவது வழக்கம்.

திருவிழாவில் இராஜகுலம், சாமந்தி குலம், எருமைக் குலம், வண்டிகாரன் குலம் உள்ளிட்ட குலங்களை சேர்ந்தவர்கள் அவர்களது குல தெய்வமாக வழிபடும் வீரபத்திரன் சாமிக்கு ஆடி முதல் நாளிலிருந்து 18-ம் நாள் வரை விரதம் இருந்து இத்திருவிழாவை நடத்துவர். இன்று நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் குருமன்ஸ் மற்றும் இராஜகுலம், சாமந்தி குலம், எருமைக் குலம், வண்டிகாரன் குலம் உள்ளிட்ட குலங்களைச் சேர்ந்த அனைத்து குல மக்கள், அவர்களின் உறவினர்கள் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்து திருவிழாவில் கலந்துக் கொண்டு பாரம்பரிய தொழிலான ஆடு மேய்த்தல், கம்பளி நெய்தல் உள்ளிட்டவைகளை நினைவுப்படுத்தும் விதமாக அவர்களின் குல காவல் தெய்வமான  வீரபத்திரன் சாமியை இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக எடுத்து சென்று வயல்வெளியில் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்த பின், அனைத்து பக்தர்களும் அகோர வீரபத்திரா என துள்ளி குதித்து வந்து, தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்தனர் .
தொடர்ந்து சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாட்டையால் அடிவாங்கினால் குலம் சிறப்பாக இருக்கும் என ஐதிகம் அதன்படி பொதுமக்கள் சாட்டையடி வாங்கினர். குருமன்ஸ் பழங்குடி பாரம்பரிய திருவிழாவில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மூக்காரெட்டிப்பட்டி, பையர்நத்தம் , சுங்காரஹள்ளி , கடத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here