சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

3 Min Read
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்

- Advertisement -
Ad imageAd image

அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது சென்னை காவல் துறை 3 வழக்குகள் பதிந்துள்ளது.சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் அவர் மீது அளிக்கப்பட்டன. இந்தப் புகார்களின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், காரில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையின் பல்வேறு ஆதாரங்கள் சிக்கின.

பத்திரிகையாளர் மற்றும் கீ. வீரலட்சுமி

அதனை தொடர்ந்து மதுரவாயலில் உள்ள வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை செய்தனர். கஞ்சா சப்ளை நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து சவுக்கு சங்கரின் மதுரவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் தி-நகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.இதற்கிடையில் பெண் பத்திரிகையாளர் மற்றும் கீ. வீரலட்சுமி உள்ளிட்டோரும் அவர் மீது புகார் அளித்தனர். சென்னையில் சவுக்கு சங்கர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில் (2024 மே 12) சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சவுக்கு சங்கர் பேட்டியளித்த யூடயூப் தொலைக்காட்சி நிறுவனரும் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு பெலிக்ஸ்

காவல் துறை அறிக்கை

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைந்து வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

Share This Article
Leave a review