கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 113 இடங்கள் தேவை. இந்த முறையும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஹெச்.டி.குமாரசாம தயவில் தான் ஆட்சி அமைக்க முடியும்.குமாரசாமி ஆதரவை பெற யார்? முந்தப்போகிறார்கள் என்பதுதான் கர்நாடக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல்.
கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு என அறியப்பட்டுள்ளது.இதில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு என்றால் குமாரசமி ஆதரவு தேவை.குமாரசாமி சாதாரணமாக ஆதரவளிக்க மாட்டார்.முதல்வர் பொறுப்பு கேட்பார? அல்லது துணை முதல்வர் பொறுப்பு கேட்பாரா? என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் மட்டுமே ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் – காங்கிரஸ் கூட்டணி அமைத்து 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமி முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருடங்களே ஆட்சி நீடித்தது. பாஜகவின் சூழ்ச்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது.அந்த கோபம் இன்னமும் குமாரசாமிக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சியாகட்டும்,பாஜக வாகட்டும் 110 இடங்களுக்கு மேல் வெற்றிபெறப்போவதில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேசிய கட்சிகள் பணத்தை மட்டுமே நம்புகின்றனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நல்ல நிர்வாகத்தை தரவில்லை என்றும் குமரசாமி கூறியுள்ளார். கர்நாடக மக்கள் ஆச்சரியமான முடிவுகளை அளிப்பார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ‘மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் பைரவா என்ற நாயை வைத்து கருத்துக்கணிப்பு நடத்தினார். கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான கோபி, சிறப்பு பூஜை செய்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என ஆருடம் கேட்டார். அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் புகைப்படங்களில், குமாரசாமியின் புகைப்படத்தை வாயில் கவ்விய ‘பைரவா’ நாய், அடுத்த முதல்வரை கணித்தது.
பார்க்கலாம் நாளை…..