கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த.வி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இன்பராஜ் (8) த/பெ. சுந்தரபாண்டியன் தினேஷ்குமார் (14) த/பெ தெய்வமணி.
இவர்கள் இருவரும் தனது நண்பர்களுடன் குமாரமங்கலத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்க சென்றனர். பள்ளி மாணவர்கள் இருவரும் நண்பர்கள் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஏரியில் சென்று குளித்துவிட்டு வரலாம் என் ஏரிக்குள்ளே இறக்கி சென்றுள்ளனர்.

ஆனால் ஆழம் தெரியாமல் இருவரும் ஏரிக்குள் சென்றபோது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் நீச்சல் தெரியாததால் இருவரும் கூக்குரல் இட்டு அலறினர். ஏரியின் அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் ஏரிக்குள் இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாத சிறுவர்கள் இருவரும் ஏரியிலே மூழ்கி பரிதாபமாக பலியாகினர்
தகவல் அறிந்து சம்பா இடத்திற்கு வந்த கம்மாபுரம் காவல்துறையினர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பள்ளி மாணவர்கள் இருந்ததை பகுதியில் மிக சோகத்தை ஏற்படுத்தியது.