சூளகிரி அருகே, 85 வயது மூதாட்டி உயிரிழப்பு. சடலத்தை சுமந்து சென்ற போலிசார். சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ! என்ன நடந்தது மூதாட்டி இறப்பில்
மயானத்திற்கு பாதைக்கேட்டு சடலத்தை சாலையில் வைத்து போராடும் உறவினர்களுக்கும் போலிசாருக்கு இடையே தள்ளுமுள்ளு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கிருஷ்ணா பாளையம் இந்த கிராமத்தில் நீண்ட நாட்களாக மயானத்திற்க்கு பாதையில்லாமல் இந்த கிராம மக்கள் கோரிக்கை வத்து வருகின்றனர்.ஆனால் பாதைகிடைக்கவில்லை.இந்த நேரத்தில் கிராமத்தை சேர்ந்த 85வயதான லட்சுமம்மா இன்று வயது மூப்பால் உயிரிழந்த நிலையில்,

மயானத்திற்கு செல்ல பாதையில்லை எனவும் பட்டா நிலத்தின் வழியாக செல்ல வேண்டி உள்ளதால் மயானத்திற்கு பாதைக்கேட்டு மூதாட்டியின் உடலை சூளகிரி – பேரிகை சாலை கூட்டுரோடு பகுதியில் சாலையில் வைத்து 100க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்..
சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சமாதானம் ஆகாத நிலையில் சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்..
சடலத்தை எடுக்க மறுத்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியதுசம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் விரைந்தார்.

ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இறந்த மூதாட்டியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்த மூதாட்டியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கிராமத்தில் இறந்த மூதாட்டியின் சடலம் கொண்டு செல்ல பாதையின்றி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சூளகிரி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியில் சாலைமறியல் போராட்டம் பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் வரை இறந்த மூதாட்டியின் சடலத்தை போலீசாரே சுமந்து சென்றனர்
பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தை பின்னர் இறந்த மூதாட்டியின் சடலத்தை 100 க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் உறவினர்களால் அடக்க செய்யப்பட்டது.