Krishnagiri- பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

2 Min Read

குற்றம் சாட்டப்பட்டோர் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்க காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனர்.

போலி ncc மாஸ்டர் சிவராமன்

இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மாணவி போலீசில் புகார் அளித்ததின் பேரில் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியைகள், முதல்வர் மற்றும் தாளாளர் உள்ளிட்டோர் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது. மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அதிரடியாக ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். அந்த பள்ளியில் படிக்க விரும்பாத மாணவர்களுக்கு வேறு பள்ளியில் படிக்கவும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இருந்து “போலி என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்” என்ற தலைப்பில் வெளியான ஊடக அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்துவதை உறுதி செய்ய தமிழக டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a review