- ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே அமைந்த கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர்,
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்ட் இன்று வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்ட நீர் அணையிலிருந்து கடந்த 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை இன்று வந்து அடைந்தது.
கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தத்தின் படி ஆந்திர, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் கிருஷ்ணா நதி நீரில் தத்தம் பங்கிலிருந்து தலா 5 டிஎம்சி நீரை சென்னை மாநகரகுடிநீர்த் தேவைக்காக இரு தவணைகளில் வழங்க வேண்டும்.
முதலாம் தவணைக்காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை;
3டி எம்.சி யும்
இரண்டாம் தவணைக்காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி யும்
கடந்த 2023-24ஆம் நீராண்டில் பெறப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு 2,412 டி.எம்.சி ஆகும் இந்த ஆண்டிற்கான முதலாம் தவணைக்காலத்தில் 19.09.2004 அன்று நண்பகல் 11:00 மணி அளவில் கண்டலேறு அணையிலிருந்து 200கன அடி திறந்தது.
பின்னர்,510 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 1300 கன அடியாக தற்பொழுது தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
இது நாளை அதிகாலை பூண்டி அணையை சென்றடையும்.
என்ற நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் கிருஷ்ணா நீரை மலர் தூவி வரவேற்றனர் ,
இந்த நீர் இரவு அல்லது நாளை காலை பூண்டி சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது .