மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் 300 அடி நீளத்திற்கு சுவற்றில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
மரங்களையும், மனிதர்களையும் பிரிக்க முடியாது. இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் மரத்தை நம்பியே வாழ்கின்றன. நமது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொள்ள மரங்களிலிருந்து வளங்களைப் பெறுகிறோம்.

மேலும், மரங்கள் தான் சுற்றுச்சூழலின் சமநிலையைக் காக்கின்றன. பயனில்லை என ஒதுக்கப்பட்ட மரங்கள் கூட காய்ந்து விழுந்து மண்ணுக்கு உரமாகின்றன. நிலக்கரியாக உருமாறுகின்றன. எளிய மக்களுக்கு எரிபொருளாகப் பயன்படுகின்றன.
மரங்களின் வளர்ச்சி என்பது சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதோடு கார்பன்-டை-ஆக்சைடை எடுத்து கொண்டு நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை நமக்கு தருகிறது.

அதேபோல மரங்கள் இருப்பதால் பல பறவைகள், மிருகங்கள் தங்குவதற்கு இருப்பிடமாக விளங்குவதோடு மழை பொழிவுக்கு மரங்கள் மிகவும் தேவைப்படுகின்றன.

சுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்கு வகிக்கும். இத்தகைய மரங்கள், விலங்குகள் உள்ளிட்டவையினை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்களின் கோவை அமைப்பின் சார்பில் சாய்பாபா காலனி பகுதியில் சுவர் ஓவியம் வரையப்பட்டது.

அதில் அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 300 அடி நீளத்திற்கு சுவற்றில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து அச்சத்தினர்.
அதை தொடர்ந்து இந்த விழிப்புணர்வு ஓவியத்திற்கு முன் நின்று பலரும் புகைப்படங்களை ஆர்வமுடன் எடுத்து செல்வதோடு இந்த ஓவிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.