கொல்கத்தா மாநிலம் மால்ட்டாவில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் அத்துமீறி நுழைந்த மர்மநபர் ஆசிரியர் மற்றும் மாணவர்களை பையில் மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை காட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
ஓல்ட் மால்டா பகுதியில் உள்ள முச்சியா சந்திரமோகன் உயர்நிலைப் பள்ளியில் நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடைப்பெற்று கொண்டிருந்த போது. காலை 11 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியது.அந்த மர்ம நபரின் பெயர் தேவ் பல்லவ் என அடையாளம் கண்டறியப்பட்டது.

தேவ் பல்லவ் தோளில் ஒரு பையுடன் பள்ளிவளாகத்தில் கீழ்தளத்தில் உள்ள வகுப்பறைக்கு சென்று துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டினார். தேவ் பல்லவ் பின்னர் பெட்ரோல் குண்டு மற்றும் ஆசிட் பாட்டில் எடுத்து வகுப்பறையில் இருந்த ஒரு மேஜையின் மீது வைத்தார்.
அதன்பின்னர் தேவ் பல்லவ் ஒரு காகிதத்தை எடுத்து, நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மீதான புகார்களை பட்டியலிடத் தொடங்கினார்.
இதுக்குறித்த தகவல் அருகிலிருந்த காவல் நிலையித்திற்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் பள்ளியைச் சுற்றி வளைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு, தேவ் பல்லவ் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து அவரைப் மடக்கி பிடித்தார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் தேவ் பல்லவ் இடுப்பில் மற்றொரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் தேவ் பல்லவின் மனைவி ஒரு பாஜக உறுப்பினர் என தெரிய வந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் நிறைந்த அந்த பஞ்சாயத்தில் பாஜக உறுப்பினராக உள்ள அவரது மனைவிக்கு,மேலும் ஆளும் கட்சியினருடன் ஏதேனும் தகராறு இருந்ததா அல்லது தம்பதியினருக்கு இடையே ஏதேனும் தகராறு இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவ் பல்லவ் தற்போது கைது செய்யப்பட்டு ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை காப்பாற்றிய டிஎஸ்பி முகமது அசாருதீன் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்தனர்.