கொடைக்கானல் என்றால் வீசும் காற்றும் குளிரும் நம் கண் முன்னே வந்து கோடை விடுமுறையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா வருவது வழக்கம் அப்படி வருகிற ஒவ்வொருவரும் படகு சவாரி குளம் என பார்க்காமல் செல்வதில்லை மக்கள் நடமாட்டம் அதிகமாவதால் தண்ணீர் மாசடைவது இயல்புதான் அந்த மாச அகற்றும் முறையில் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தாலும் கூட அந்த பணி முழுமை அடையாமலே போய்விடுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இங்கு நகரின் மத்திய பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியாக நட்சத்திர ஏரி இருந்து வருகிறது . நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் நட்சத்திர ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி உள்ளிட்டவை செய்தும் மகிழ்ச்சி அடைவர் . தொடர்ந்து நட்சத்திர ஏரியில் தண்ணீரில் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் நகராட்சி சார்பில் அதனை ஆய்வு மேற்கொண்டு சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர் .

தொடர்ந்து நட்சத்திர ஏரியை மேம்படுத்தும் வகையில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, வேலி , நீரூற்றுகள் புதிய படகு குழாம் உள்ளிட்ட நவீன வசதிகளை நகராட்சி கட்டமைத்து வருகிறது.
இருந்தாலும் குளத்தில் சேர்ந்து விடும் கழிவுகளை முழுமையாக அகற்ற முடியாமல் போய்விடுகிறது. இதனை சரி செய்யும் விதமாக ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் பயோ பிளாக் என்னும் ஜப்பான் தொழில்நுட்பத்தை புகுத்தி ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் முயற்சியையும் கொடைக்கானல் நகராட்சி மேற்கொண்டுள்ளது . முதற்கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் 50,000 லிட்டர் தற்காலிக தொட்டி அமைத்து ஏரி நீரை சேமித்து அதில் பயோ பிளாக் என்னும் பவளப்பாறைகளை மூழ்க விட்டு ஒன்றரை மாதங்களாக ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது . இதில் மாசடைந்த ஏரி நீர் தெளிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது .
இதன் தொடர்ச்சியாக ஏறி சுற்றி 41 இடங்களில் 16,000 பயோ பிளாக் கற்கள் மிதக்க விட உள்ளன எனவும் இதன் மூலம் ஏரியில் உள்ள 7 லட்சம் கியூ பிக் லிட்டர் நீர் தூய்மைப்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பயோ பிளாக் கற்கள் அமைப்பதன் மூலம் ஏரி நீர் தூய்மை அடைந்து தேவையற்ற நீர் தாவரங்களையும் இயற்கை முறையில் அகற்றப்பட உள்ளது எனவும் கொடைக்கானல் ஏரி துவக்கத்தில் இருந்ததுபோல் மீண்டும் நன்னீர் ஏரியாக காட்சியளிக்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே கொடைக்கானல் ஏரியில் தான் தற்போது இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஒரு மாதத்திற்குள் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நன்னீர் ஏரியாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் இது நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.