சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து உள்ளது.
தக் லைஃப் ( thug life ) என்ற இந்தப் படத்தின் டைட்டில் டீசர் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் கமலுடன் நடிக்கவிருப்பவர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசன் நாளை தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரது 234வது படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில், தற்போது வெளியாகியுள்ளது.படத்தின் பெயர் தக் லைஃப் ( thug life ) என சூட்டப்பட்டு இருக்கிறது.
இதனிடையே இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி படத்தில் த்ரிஷாவும், துல்கர் சல்மானும், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்படம் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகவுள்ளது என கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி தொடர்ந்து மேலும் பல நட்சத்திரங்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். இதேபோல் ஜெயம் ரவியும் பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழனாக நடித்திருந்தார். மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வனில் குந்தவையாக சிலிர்க்க வைத்த த்ரிஷா, இப்படத்தில் ஆக்ஷனில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கமல் – த்ரிஷா கூட்டணி தூங்காவனம், மன்மதன் அம்பு படங்களுக்குப் பின்னர் இப்படத்தில் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி என படக்குழு செம்ம ஸ்ட்ராங்காக மாறி வருகிறது. இதேபோல், மேலும் பல தரமான சம்பவங்களை இப்படத்தில் எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள். கமல் – மணிரத்னம் காம்போ 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைவதால், இப்படம் நாயகன் இரண்டாம் பாகமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Super
Happy birthday aandavar