சிறுவாணி தடுப்பணை விவகாரம்! கேரளா அரசை கண்டித்து பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம்.!

1 Min Read
மறியல் போராட்டம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை மறித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்
சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி அருகில் கூலி கடவு என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணையை கட்டி வருகிறது.90% பணிகள் முடிந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு அணைகள் கட்ட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த அணை கட்டுவதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு  அதிகமாகவே நிலவும் அபாயம் உள்ளது. இந்த தடுப்பணை கட்டுவதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நீண்ட காலமாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

இந்நிலையில் தடுப்பணையை அகற்ற கோரியும் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரளா அரசை கண்டித்தும் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலுகம் முன்பு  தந்தை பெரியார் திராவிட கழகம், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து கேரளா போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..

பதாகைகளுடன்

தமிழக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கேரளா அரசு அணை கட்டுவதை  நிறுத்த வேண்டும்.
என முழக்கங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Share This Article
Leave a review