கென்யா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏடன் பேர் டூயல் 3 நாள் பயணமாக ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்தியா வந்தார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கென்ய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் போது கோவா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலைகளை திரு ஏடன் பேர் டூயல் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2022 இல் கென்யாவில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் அமைச்சர் டூலே இந்தியாவுக்கு வருவதும், உயர் மட்ட அளவில் கென்ய நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர் இந்தியாவிற்கு வருவதும் இது முதல் முறையாகும்.
ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கும் கென்யாவுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பிற்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் சுட்டிக்காட்டுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய பாதையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.