இன்று தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பெற்றோர்கள் இறந்த மாணவனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி . தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்வை 8,35,600 பேர் இந்தாண்டு தேர்வு எழுதியிருந்தனர் அதில் மாணவர்கள் 4,04,900, மாணவிகள் 4,30,700 தேர்வு எழுதயிருந்தனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 180 பள்ளிகளைச் சார்ந்த மொத்த மாணவமாணவிகள் 11800 இல் 11780 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 5200 மாணவர்கள், 5560 மாணவிகள் என மொத்தம் 10779 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91 % சதவிதமாகும்.
இதில், மாணவர்கள் 88.27% தேர்ச்சியும், மாணவிகள் 94.72% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கரூர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதம் 20வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83 சதவிதமாகும். இந்த ஆண்டு 91.49 சதவிதம் பெற்றுள்ளது.
கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சிவா, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான்.
இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பத்தாம் வகுப்பில் மாணவன் தோல்வியடைந்த துக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருகில் இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்ததில் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மாணவனின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது, இது அவர்களின் பெற்றோருக்கு நித்திய வேதனையை ஏற்படுத்தும் மற்றும் தற்கொலை ஒருபோதும் தீர்வைத் தராது. நீங்கள் சமூகத்திற்கு சோகத்தை மட்டுமல்ல, பெற்றோருக்கும் வலியை விட்டுவிடுகிறீர்கள். எதிர்மறையாக எதையும் முடிவெடுக்கும் முன் பெற்றோரைப் பற்றி சிந்தித்து அவர்களுடன் பழகுங்கள்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.