கருணாநிதி நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாட திமுக முடிவு

1 Min Read
கருணாநிதி ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஜூன் மூன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, சாமி நாதன், எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜூன் மூன்றாம் தேதி மத சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வடசென்னைகள் நடைபெற இருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கூட்டதை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டங்கள் தோறும் மிகச் சிறப்பாக கொண்டாடும் முறையில் வருவது மூன்றாம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மூன்றாம் தேதி வரை நூறாண்டு காலத்திற்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும். ஒவ்வொரு நிகழ்வும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், கருணாநிதி அளப்பரிய சாதனைகளை மக்கள் நெஞ்சில் பதிவு செய்யும் வகையில் அமைந்திட  வேண்டும். என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review