சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பலத்த பாதுகாப்புடன் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இந்த சம்பவம் நடந்தது என்று ஆச்சரியப்படுகின்றனர் பொது மக்கள்.

திடீரென பெட்ரோல் குண்டு வீசி விட்டு ஒருவர் தப்பி ஓடிய சம்பவம்,யார் செய்ய முடியும் இந்த செயலை.ஆளுநர் மாளிகை அருகே பாதுகாப்பு வளையத்தை மீறி ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அவரிடம் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.யார் இந்த கருக்கா வினோத் போலிசாருக்கு தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய சம்பவத்தில் இவரால் ஈடுபட முடிந்தது. சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேர்ந்தவர் கருக்கா வினோத் பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகிறது.இந்த நிலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மிகுந்த பாதுகாப்பு மிக்க இடமாகும்.ஏராளமான போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் இதை எல்லோரும் அறிவார்கள்.ஆளுநர் மாளிகை சுற்றிலும் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் திடீரென கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகில் வந்து தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.அப்போது தான் பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றபோது சுற்றி வளைத்து கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்து கிண்டி காவல் நிலையத்தில் பல கோணங்ககளில் விசாரணை நடத்தி வருகின்றனர் கருக்கா வினோத் கடந்த ஒரு ஆண்டாக சிறையில் பல்வேறு வழக்கங்களில் சிறையில் இருந்தார்.அந்த வழக்குகள் பற்றிய விபரங்களும் சேகரிப்பட்டு வருகின்றனர் போலீசார்.

கருக்கா வினோத் சிறையில் இருக்கும் போது தனது விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் நீட் தேர்வு ரத்து செய்ய ஆளுநர் கையெழுத்திடவில்லை அதனால் பெட்ரோல் வெடிகுண்டை வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.இது உண்மையா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதே போன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வழக்கில் இருந்தும் தற்போது தான் ஜாமினில் வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது.இல்லை வேறு ஏதாவது அரசியல் தலையீடு இருக்குமோ எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.