கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 Min Read
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வரும் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. இதையடுத்து, கடைமடை வரை தங்குத் தடையின்றி தண்ணீர் செல்ல ஏதுவாக, டெல்டா பாசனப் பகுதிகளில், நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த காலங்களை போல இல்லாமல் இருக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே முதலை முத்துவாரி வடிகாலில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள முள்ளம்பள்ளம் வாய்க்கால் உள்ளிட்ட டெல்டா பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். முள்ளம்பள்ளம் வாய்க்கால் 5 லட்சம் ரூபாய் செலவும், பிரிவு வாய்க்கால்கள் 6 லட்சம் ரூபாய் செலவிலும் தூர்வாரப்பட்டுள்ளன.

முதலமைச்சர்

இதனைத் தொடர்ந்து, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரிபாசன பகுதிகலில் உள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக 2021-22 ம் ஆண்டில் 62 கோடியே 91 லட்சம் நிதி ஒடிக்கீடு செய்யப்பட்டு 3859 கி.மீ நீளம் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் சிரப்பாக மேற்கொள்ளப்படன. “சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் 96 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். எஞ்சியப் பணிகளும் இன்னும் சில நாட்களுக்குள் முழுமையாக நிறைவு பெறும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் மேகதாது அணை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, கடந்த கர்நாடகா அரசை போல புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளது. ஆனால் கருணாநிதி அரசை போல மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்கும். இதுவே தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

Share This Article
Leave a review