கன்னட நடிகர் சிவராஜ்குமார் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடகாவில் சிவமோகா தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
கன்னட சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், தற்போதைய முன்னணி நடிகருமான சிவராஜ்குமார்,காங்கிரஸ் கட்சிக்காக களமிறங்கியுள்ளதால் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல பிரபலங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு செய்கின்றனர்.அந்த வகையில் பாஜகவிற்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பேரணியில் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, கர்நாடாகாவில் சித்ரதுர்காவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேசினார். பின்னர் பேசிய சிவராஜ்குமார், ராகுல் காந்தியின் ரசிகனாக நான் இங்கு வந்துள்ளேன் எனவும், ராகுல் காந்தியின் நடைபயணம் என்னை ஈர்த்தது எனவும் பேசினார்.
அண்மையில், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.