Karnataka Assembly Election 2023 – இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது…

1 Min Read
கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் 2023

கர்நாடகா மாநிலத்தின்  சட்டமன்ற தேர்தல் 2023  நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைவதால் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
தேர்தல் ஆணையம்.

கர்நாடகாவில் மொத்தம்  உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 10ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக  பரபரப்பாக நடந்து வருகிறது.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற உறுதியோடு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக சார்பில் பிரதமர் மோடி அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள் , காங்கிரஸில் சார்பில்  ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கர்நாடகாவின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளதால் கர்நாடகா முழுவதும் பிரச்சார வாகனங்கள் பல பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மேலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில் கர்நாடகாவில் ஓட்டுரிமை உள்ள அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களை தவிர்த்து மற்றவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Share This Article
Leave a review