கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து ரூ. 1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையானது மே 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் ஆட்டோக்களில் இருந்தும், மாமரத்தில் இருந்தும் கோடிக்கணக்கில் பணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி வருகின்றனர். ராய் புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமாரின் சகோதரர் சுப்ரமணியராய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு அவர் வீட்டில் உள்ள மாமரத்தில் ஒரு பெட்டியில் ரூ.1 கோடி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அண்மையில், ஏப்ரல் 13 ஆம் தேதி கர்நாடகாவில் சிட்டி மார்க்கெட் பகுதிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் உள்ள பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.கர்நாடகாவில், சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் உரிய ஆவணம் இல்லாமல் பெரிய தொகையை கொண்டு செல்ல அனுமதியில்லை.