கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் – எழுத்தாளர் உதயசங்கர் வேண்டுகோள்

1 Min Read
எழுத்தாளர் உதயசங்கர்

1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும் தாயார் கமலம். இவர் மல்லிகா என்பவரை ஏப்ரல் 12, 1987 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு நவீனா, துர்கா என்ற இரு மகள்கள் உள்ளனர், இருவரும் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆவார்கள். இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். இரயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான சாகித்திய பால புரஸ்கர் விருது உதய சங்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அவர் எழுதிய ஆதனின் பொம்மை நாவலுக்கு விருது அறிவித்தது தொடர்ந்து.

எழுத்தாளர் உதயசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

1990க்கு பிறகு குழந்தைகளுக்காக  எழுத வேண்டும் என்ற முறையில் குறிப்பாக இளைய தலைமுறையிடம் நாம் சரியான விஷயங்களை கொண்டு செல்ல வேண்டியதிருக்கிறது.
நாம் குழந்தைகளிடம் பகுத்தறிவு அறிவியல் பூர்வமான விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் குழந்தைகளை நோக்கி எழுத வேண்டும் என்று தோன்றியதால் கிட்டத்தட்ட 51 நூல்களை எழுதி இருக்கிறேன். இதில் 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கானவை, 9 நூல்கள் இளையோருக்கானவை. இந்த நூல்களில் எல்லாம் குழந்தைகளுக்கு அரசியலை சொல்லி இருக்கிறேன் என்று சொல்லலாம்
68 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்.

கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் ஒன்றை கோவில்பட்டியில்  தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். அந்தக் கோரிக்கையை
அரசு ஏற்று புதிய எழுத்தாளர்களை படைப்பாளர்களை ஆய்வாளர்களை உருவாக்குவதற்கு ஒரு மையம் அமைக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் கி ராஜநாராயணன் மணிமண்டபத்தை அதற்காக பயன்படுத்தலாம் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன் எனக் கூறினார்.

Share This Article
Leave a review