சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில், கண்டதேவி சொர்ண மூர்த்திஸ்வரர் ஆலய தேரோட்டத்தை நடத்த முடிவு. சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோவில் தேரோட்டத்தை ஜனவரி 21ல் நடத்துவது என்று கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலய தேரோட்டம் நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த 3 ஆம் தேதி நீதிபதி புகழேந்தி முன்பு விசாராணை வந்தது. அப்போது அவர், மாநில அரசால் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால், மத்திய துணை கொண்டு இராணுவ உதவியோடு கண்டதேவி கோவில் தேரோட்டத்தை நான் ஓட வைக்கவா? என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

பின்பு, தேரை ஓட வைப்பது குறித்து, அனைத்து தரப்பினர் மக்களிடம் சேர்ந்து அந்த ஊரில் எல்லாரும் முடிவெடுத்து, அதனை பின்னர் வரும் 17ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். பின்பு இதனை தொடர்ந்து, அதற்கான மக்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஷித் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் சிவகங்கை சமஸ்தான பரம்பரை சேர்ந்த அறங்காவலர் ராணி, சிவகங்கை மாவட்ட மதுராந்தக நாச்சியார் கோவில் பொறுப்பாளர்களான செம்பொன் மாரி, உஞ்சனை கண்டதேவி ஆகியோர் உட்பட நான்கு ஊர் நாட்டார்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆகியோர் உட்பட ஏராளமானோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கண்டதேவி சொர்ண மூர்த்திஸ்வரர் ஆலய தேரின் வெள்ளோட்டத்தை வருகின்ற ஜனவரி மாதம் 21 ஆம் தேதி காலை 06-30 மணி முதல் 08-30 மணிக்குள் வரை சிவகங்கை தேவஸ்தான ஊழியர்களைக் கொண்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினை உயர்நீதிமன்ற, மதுரை கிளையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிக்கையாக மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.