சினிமாவில் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி வரவெற்ப்பை பெற்ற நிலையில், அதன் தற்போது சங்கர் இயக்கத்தில் வெளியான கமலஹாசன் நடித்த இரண்டாம் பாகம் இந்தியன் -2 தயாராகி உள்ளது. இதில் இந்த இந்தியன் -2 திரைப்படத்தில் கமலஹாசன் உடன் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரிய பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடித்த கமலஹாசன் இந்தியன் – 2 படப்பிடிப்பு முடிந்து அடுத்து கட்டமாக தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. கமலஹாசனின் பிறந்தநாள் வருகிற 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ நேற்று வலைதளத்தில் வெளியானது. இந்த அறிமுக வீடியோ மக்களிடம் பெரும் உற்சாக வரவேற்ப்பை பெற்றது. இந்த அறிமுக வீடியோவை தமிழில் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

இதற்காக கமலஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அன்பான நண்பர் ரஜினிகாந்த்க்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார். மேலும் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 முன்னோட்ட வீடியோவை தெலுங்கில் ராஜமவுலி, ஹிந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சுதீப் ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர். அறிமுக வீடியோவில் இந்தியாவில் பல துறைகளில் லஞ்சமும், ஊழலும், தலைவிரித்து ஆடுவதும் இதனால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர், என்பதும் காட்சிகள் அதிகமாக இடம் பெற்று உள்ளது.
அந்த அறிமுக வீடியோ டீசரின் ஆரம்பத்தில் எங்கு தப்பு நடந்தாலும் அங்கு நான் வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது. என்று வயதான தோற்றத்தில் இருக்கும் கமலஹாசன் தொலைபேசியில் பேசும் வசனம் அறிமுக வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வேலைக்கு காண்டிராக்டுக்கு லஞ்சம் கொடுக்கும் காட்சிகள் அதிகமாக உள்ளன. எங்கும் பணம் குவிந்து கிடக்கிறது. அநியாயம் பழகிருச்சு, எதுவும் இங்கும் மாறவில்லையே, என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்புகிடைத்துள்ளது. கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இத்திரைப்படம் ரசிகர்களிடைய மாபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.