குண்டர் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் அவரின் மகன் ஜெகன்ஸ்ரீ. இவரை கடந்த மாதம் 24 ஆம் தேதி. கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த அங்கமுத்துவின் மகன் ஐயப்பன் மற்றும் மணிகண்டனின் மகன் ஆகாஷ். இவர்கள் இருவரும் சேர்ந்து முன்விரோத காரணமாக. ஜெகன்ஸ்ரீயை கொலை செய்து. அதன் பின்னர் அவர் சடலத்தை கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அய்யப்பன் மற்றும் ஆகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து கைதான இரு குற்றவாளிகள். மேலும் அவர்கள் குற்ற செயல்களை தடுக்கும் வகையில். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மோகன்ராஜ். கலெக்டருக்கு பரிந்துரை செய்தார் இதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் ஐயப்பன் மற்றும் ஆகாஷ்ஆகியோரை குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐயப்பன் மற்றும் ஆகாஷிடம் சிறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது.