கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஜூலை 13 ஆம் தேதி உயிரிழந்ததையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

அதை தொடர்ந்து தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் தாய் செல்வி மற்றும் விசிக நிர்வாகி திராவிடமணி ஆகியோரிடம் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பினர்.

அதன்படி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் விசிக நிர்வாகி திராவிடமணி ஆஜரானார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், அடுத்த வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமதியின் வீட்டிற்கு,

கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு துணை காவல் கண்காணிப்பாளர் அம்மாதுரை மற்றும் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் சென்று ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் அவரது தந்தை ராமலிங்கத்திடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.